வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் சாந்தி (60). இவருடைய பேரனான அஜித் என்பவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய பாட்டியிடம் அஜித் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் பாட்டி கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த அஜித் தன்னுடைய பாட்டியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுக்கவே விரைந்து வந்த காவல்துறையினர் சாந்தியின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு […]
