லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு நபர் தன் பாட்டியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் தெற்கு பகுதியிலிருந்து காவல் துறையினருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் வயதான பெண்மணி ஒருவர் கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஆம்புலன்ஸ் உதவியுடன் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு சகுந்தலா பிரான்சிஸ் என்ற 89 வயதுடைய மூதாட்டி கத்தியால் குத்தப்பட்ட காயங்களோடு உயிரிழந்து கிடந்தார். […]
