கேரள மாநிலத்தில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து அவர்களை கொலை செய்து நகைகளை திருடும் சம்பவம் மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது வீட்டில் வைத்திருந்த நகை பணம் காணாமல் போனதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை கட்டச்சேரி அருகிலுள்ள ஒரு பகுதியில் வசிக்கும் 70 வயது மூதாட்டி […]
