தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி கொடியை பறக்க விடுமாறு டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களை அவ்வையாரின் நல்வழி நாற்பது பாடலை கூறி டாக்டர் ராமதாஸ் அழைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உலகத் தத்துவங்களை இரண்டே வரியில் எழுதியவர் அய்யன் திருவள்ளுவர். அவரை விட எளிமையாக பல கவிதைகளை படைத்து அதன் மூலம் வாழ்க்கை நெறிமுறைகளை இந்த உலகுக்கு கூறியவர் அவ்வையார். […]
