விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 2 வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் அஸ்வின் பிரபலமானார். இந்நிகழ்ச்சிக்கு முன்பு சிங்கிள் டிராக்குகள், குறும்படங்கள் நடித்து வந்த அஸ்வினுக்கு இந்நிகழ்ச்சிக்கு பிறகு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமில்லாமல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகிய ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் அஸ்வின் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் அஸ்வின் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் செம்பி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கோவை […]
