சீனாவின் வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ்சை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. […]
