பிரபலமான பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே மாதம் 29-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு வழக்கில் தொடர்புடைய தீபக் டினு, கபில் பண்டிட், ராஜீந்தர் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் முதல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். […]
