பா.ஜ.க-வினர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “நாடு முழுவதும் பாப்புலர் பிராண்ட்ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்ற 22-ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது தமிழகத்தில் 11 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். இதனால் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் சிலஇடங்களில் போராட்டம் மேற்கொண்டனர். இவற்றில் 1410 பேர் கைதுசெய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் […]
