பா.ஜ.க மாநில தலைவர் பிறந்தநாள் விழாவில் பந்தல் சரிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதனின் பிறந்தநாள் விழா லாஸ்பேட்டை பகுதியில் உள்ள மைதானத்தில் நேற்று இரவு கொண்டாடப்பட்டது. விழாவில் பா.ஜ.க அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில் சாமிநாதனின் பிறந்தநாளையொட்டி, விழாவுக்கு வருபவர்களுக்கு இலவச பரிசு பொருட்கள் தரப்படும் என சாமிநாதனின் ஆதரவாளர்கள் லாஸ்பேட்டை தொகுதி முழுவதும் தகவல் பரப்பினர். இதனால் விழா நடைபெற்ற […]
