உத்தரபிரதேச மாநிலம் மதுரா சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 24ம் தேதி 7 மாத பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டது. குழந்தை பெற்றோருடன் ரயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்குவந்த நபர் குழந்தையை கடத்தி சென்றார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை கடத்திய கும்பல் தனியார் மருத்துவமனை நடத்தி வரும் பூனம் மற்றும் விம்லேஷ் டாக்டர் தம்பதியிடம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவ தம்பதியிடம் நடத்திய விசாரணையில் குழந்தையை அப்பகுதியை சேர்ந்த பாஜக […]
