தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “கோவை கிணத்துக்கடவு பகுதிகளில் கனிமவள கொள்ளை அதிகரித்து உள்ளது. இவ்விவகாரத்தில் பா.ஜ.க தொடர் போராட்டங்களைக் கையில் எடுக்கும். தி.மு.க அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இதற்கிடையில் தினசரி விலைவாசி அதிகரிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க உட்கட்சி பிரச்சனையில் பாஜக எப்போதும் தலையிடாது. தற்போதெல்லாம் பா.ஜ.க-வை பற்றி பேசிதான் திமுக வண்டி ஓடுகிறது. ஆரிய-திராவிடம் எனும் பிரிவினையை ஏற்காதவன் […]
