சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ( கமலாலயம் ) மர்ம நபர்களால் மூன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் நல்ல வேளையாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் பொருள் சேதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் சிக்கிய சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்மநபர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது […]
