உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து பாஜக கட்சி பல்வேறு விதமாக விமர்சனங்களை அடுக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று பாஜகவை சேர்ந்த கே.பி ராமலிங்கம் தமிழக அமைச்சரவையில் குரங்குகள் கூட்டம் இருக்கிறது என்றும், தற்போது புதிதாக ஒரு குரங்கு நுழைகிறது என்று விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் மதுரை மாநகரம் முழுவதும் பாஜக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்ற […]
