ஓ. பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளரும் அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கிறார். அதிமுக தலைமை அலுவலகத்தில் வழிகாட்டுதல் குழுவிற்கு அதிகாரம் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வந்த சமயத்தில் அந்த குழுவில் இடம்பெற்றிருந்த மாணிக்கம் திடீரென பாஜகவில் இணைந்து இருக்கிறார். 2016 முதல் 2021- ஆம் ஆண்டு வரை சோழவந்தான் தொகுதி எம்எல்ஏவாக இருந்த மாணிக்கம் ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது முதல் நபராக ஆதரவு […]
