இளம்பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் அருகே கரியாம்பாளையம் மசக்கவுண்டன்புதூர் பகுதியில் சண்முக சுந்தரம் (38) என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் வசிக்கும் 27 வயது இளம்பெண்ணை சண்முகசுந்தரம் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகசுந்தரம் தன்னுடைய காதலை அந்த பெண்ணிடம் சொல்ல இளம்பெண் அதற்கு மறுப்பு தெரிவித்து தன்னுடைய பெற்றோரிடம் சென்று பெண் கேட்குமாறு கூறியுள்ளார். உடனே சண்முக சுந்தரமும் இளம் பெண்ணின் பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளார். […]
