பாசன கால்வாய் வெட்டப்பட்டுதாகக் கூறி சினிமா பாணியில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இளங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டிருக்கின்றனர். இந்த பகுதிகளில் விவசாயம் ஏரி பாசனம் மூலம் நடைபெறுகிறது. ஆனால் கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து சரிவர மழை பெய்யாததால் பாசன கால்வாய் முற்றிலுமாக முடங்கியது. இதனால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். […]
