பாக்கெட் சாராயம் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விட்டனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலாற்று பகுதியில் பாக்கெட் சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருப்பதாக அப்பகுதி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல் துறையினருக்கு வெங்கடேசன் என்பவர் பாக்கெட் சாராயம் விற்பனை செய்தது உறுதியானது. இதனை அடுத்து […]
