Categories
உலக செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு பரவிய 50% கொரோனாவுக்கு இந்த நாடு தான் காரணம்… வெளியான தகவல்..!!

பிரிட்டனில் வெளிநாடுகளில் இருந்து பரவிய கொரோனா தொற்றுக்கு 50% பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் தான் காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளது பிரபல பிரிட்டன் பத்திரிக்கை நிறுவனமான MailOnline வெளியிட்ட செய்தியில் பிரிட்டனில்  கொரோனா  தொற்று பரவ  50 சதவீதத்திற்கு காரணம் பாகிஸ்தானிலிருந்து பிரிட்டன் வந்தவர்கள் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 4ஆம் தேதியிலிருந்து பிரிட்டனுக்கு வந்து கொரோனாவை  பரப்பியவர்கள் 50% பேர் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இங்கிலாந்து சுகாதாரத்துறை 30 […]

Categories
உலக செய்திகள்

ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி..! – பாக்., பாராளுமன்றத்தில் புகழாரம் சூட்டிய இம்ரான்!

சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை தியாகி என்றும், நம் நாட்டிடம் தெரிவிக்காமல் அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அவரை கொன்றது அவமானம் என்றும் பாக்., பாராளுமன்றத்தில் இம்ரான் பேசியுள்ளார். பாகிஸ்தான் இன்னமும் பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கி வருகிறது என அமெரிக்க வெளியுறவுத் துறை மதிப்பீடு அறிக்கை வெளியிட்டுள்ளது.  புதன் கிழமை அன்று  வெளியான அந்த அறிக்கையில் இந்தியா மற்றும் ஆப்கனை குறிவைத்து செயல்படும் பயங்கரவாத இயங்கங்களை பாகிஸ்தான் அரசு  ஒடுக்கவில்லை. மேலும் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாருக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனக்கு கொரோனா இல்ல… முகமது ஹபீஸ் டுவிட்… குழம்பிப்போன சக வீரர்கள்..!!

பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் தாக்கு கொரோனா தொற்று இல்லை என ட்விட் செய்துள்ளார்  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் 28ஆம் தேதி இங்கிலாந்து நடைபெற இருக்கும் 3 டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரை விளையாடுவதற்காக புறப்படும் நிலையில் அணியில் இருக்கும் வீரர்களுக்கு கிளம்புமுன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் மேற்கொண்ட பரிசோதனையில் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ், முன்னணி பேட்ஸ்மேன் ஜமான் உட்பட பத்து வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என […]

Categories
உலக செய்திகள்

முதல்முறையாக பாகிஸ்தான் தலைநகரில் உதயமாகும் இந்து கோவில்..!!

பாகிஸ்தான் தலைநகரில்  முதல் முறையாக இந்து கோயில் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்துள்ளது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்துக்கள் அதிகம் வசித்து வரும் நிலையில் அங்கு இந்துக்கோவில் இல்லாத காரணத்தினால் நாட்டின் வேறு பகுதிகளுக்கு அவர்கள் சென்று வழிபடும் சூழல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்து மக்களின் நீண்ட கால கோரிக்கையை  ஏற்று பாகிஸ்தான் தேசிய மனித உரிமை ஆணையம் கோயில் கட்டுவதற்கு நிலத்தை ஒதுக்க அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில் 2017 ஆம் ஆண்டு அந்நாட்டின் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

போலி ஆதார் வைத்து உளவு பார்த்த அதிகாரிகள்….. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு…!!

டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் உளவு பார்த்ததால் அவர்களது எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்க பாகிஸ்தானிடம் இந்தியா கூறியுள்ளது  டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வந்த 2 பேர் உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் தாங்கள் இந்தியர்கள் என்று கூறி அவர்களது ஆதார் அட்டையை காட்ட அது போலியானது என கண்டறியப்பட்டது. பின்னர் அவர்களே பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ  ளவு அமைப்பின் உத்தரவை தொடர்ந்து உளவு பார்த்ததாக ஒப்பு கொண்டதை அடுத்து கைது […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வஹாப் ரியாஸ், ஃபகர் ஜமான், இம்ரான் கான், முகமது ஹபீஸ், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதியாகியுள்ளது. பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மேலும் 7 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு ஜூன் 24 ஆம் தேதி சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

திடீர் வெடிகுண்டு தாக்குதல்…. 3 பேர் உயிரிழப்பு…!!

பாகிஸ்தானில் திடீரென ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் பலியான சம்பவம் பரபராப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கோட்டாவின் மார்க்கெட் பகுதியில் நின்றிருந்த கார் ஒன்றின் மேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக நடைபெற்ற இத்தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத […]

Categories
உலக செய்திகள்

தீவிரவாதத்தின் பிறப்பிடமாய் திகழ்கிறது பாகிஸ்தான் – இந்திய வெளியுறவுத்துறை

பாகிஸ்தான் தீவிரவாதத்தின் மையமாகத் திகழ்கிறது என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐநா மனித உரிமை ஆணையத்தின் 43வது மறுசீரமைக்கப்பட்ட அமர்வு நடைபெற்றது. இதில் ஐக்கிய நாடுகள் சபையின் பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி கூறிய போது “இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று தன்னை அழைக்கும் அதேவேளை அது ஜம்மு காஷ்மீர் மீது சுமத்தப்பட்டிருக்கும் இரும்புத் திரைக்குப் பின்னால் மறைந்து கொள்கின்றது. அது மனித உரிமை மீறல்களை செய்து வருகின்றது. சட்டத்தின் ஆட்சி, […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

வீரர்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – இந்தியா தக்க பதிலடி …!!

இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி சீனா தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த பதட்டத்தை தணிப்பதற்கு இந்திய மற்றும் சீன உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தற்போது பாகிஸ்தான் வீரர்களும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பது எல்லையில் அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அமைந்திருக்கும் நவ்காம் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

இந்திய ஊழியர்கள் இருக்கும் இடம் எங்கே ? பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல் …!!

பாகிஸ்தானில் காணாமல் போனதாக சொல்லப்பட்ட இந்திய அதிகாரிகள் இருக்கும் இடம் தெரியவந்துள்ளது. இன்று காலை பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இயங்கிவரும் இந்திய தூதரக ஊழியர்கள் 2 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியது. இதை அடுத்து இந்திய அதிகாரிகள் இரண்டு பேரும் எங்கிருக்கிறார்கள் ? இந்திய அதிகாரிகளுக்கு என்ன ஆனது ? என்று அடுக்கடுக்கான விவரங்கள், விசாரணைகள் இந்திய அரசால் பாகிஸ்தானுக்கு வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது, பாகிஸ்தான் காணாமல் போன 2 இந்திய தூதரக ஊழியர் இருக்குமிடம் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

காணாமல் போன இந்திய அதிகாரிகள் …. பாகிஸ்தானில் என்ன நடக்குது ?

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் 2 இந்திய அதிகாரிகளை காணவில்லை என ANI  செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. காலை முதல் இரண்டு அதிகாரிகளையும் காணவில்லை என பாகிஸ்தானிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் ANI செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது இருநாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Two Indian officials working with Indian High Commission in Islamabad (Pakistan) are missing: Sources — ANI (@ANI) June 15, 2020

Categories
உலக செய்திகள் கிரிக்கெட்

“எனக்கு கொரோனா தொற்று”… பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி ட்வீட்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, கடந்த வியாழக்கிழமை அன்று உடல்நிலை சரியில்லாமல் போனது. மிகவும் அதிகமான உடல்வலி ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா…. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள் …!!

பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்ளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனவைரஸ்ஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் 77 லட்சத்து 57 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்து 28 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவால் சின்னாபின்னமாகி உள்ளது. அங்கு மட்டும் 21 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் ஒரு லட்சத்து 16 […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 6,397 பேருக்கு கொரோனா….. பதறும் பாகிஸ்தான்….!!

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,397 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது உலக நாடுகளிடையே பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துவரும் கொரோனா தொற்று பாகிஸ்தானில் தற்போது அதிவேகமாக பரவி வருகின்றது. தொற்று பரவுவதை தடுக்க பாகிஸ்தான் அரசு பல நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வரும் நிலையில் மக்கள் பொது இடங்களில் கூட தடை விதித்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பாகிஸ்தானில் […]

Categories
உலக செய்திகள்

கிலோ ரூ20 தான்…. 1 நாளைக்கு ரூ1,500 லாபம்…. களைகட்டும் வெட்டுக்கிளி வியாபாரம்….!!

பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகளை பிடித்து கிலோ 20 க்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். சமீபத்தில் ஐரோப்பா கண்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை சேதப்படுத்தியதுடன் இந்தியா, பாகிஸ்தான் பகுதிகளிலும் படையெடுக்க ஆரம்பித்து ஏராளமான பயிர்களை நாசம் செய்தது. அந்த வகையில், வட மாநிலத்தில் ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பயிர்களும் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு சோகத்தில் மூழ்கியிருந்தனர். இதேபோல், பாகிஸ்தானிலும் 25 சதவீதத்திற்கும் மேல் பயிர்களை வெட்டுக்கிளிகள் படையெடுத்து சேதப்படுத்தியுள்ளன. […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் என்ன நடக்கிறது…. ! துப்பாக்கி முனையில் சிறுமி கடத்தல் …!!

பாகிஸ்தானில் சிறுபான்மையினரான கிறிஸ்தவ சிறுமியை இஸ்லாமியர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் நகரில் சிறுமி ஒருவர் வேலைக்கு செல்ல தொழிற்சாலை வாகனத்திற்காக காத்திருந்த சமயம் திடீரென வந்த கும்பல் அவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் வசித்து வரும் சிறுபான்மையினரான கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பெண்கள் இஸ்லாமியர்களுக்கு இலக்காக   இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் கூறும்பொழுது எதற்காக எங்கள் சகோதரிகளுக்கு, மகள்களுக்கு இதுபோன்று நடக்கிறது. அவர்கள் வெளியே […]

Categories
உலக செய்திகள்

நாம் ஒரு ஏழை நாடு….. வேற வழியில்லை… கதறும் இம்ரான்கான்….!!

பாகிஸ்தான் ஏழ்மையான நாடாக இருக்கும் போது ஊரடங்கு தளர்த்துவதை தவிர வேறு வழியில்லை என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார் உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்று பாகிஸ்தானில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஊரடங்கை தளர்த்தி இருப்பது ஆபத்தானது என பல தரப்பினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கை  தளர்த்தியது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விளக்கம் கூறியுள்ளார். அதில், “ஊரடங்கு அமல் படுத்துவது கொரோனா தொற்றிற்கு தீர்வாக அமையாது என்பதை […]

Categories
உலக செய்திகள்

குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்து… குழந்தை உட்பட 13 பேர் பரிதாப பலி!

பாகிஸ்தானில் குடியிருப்பு கட்டடம் ஓன்று  இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில்,  இடிபாடுகளில் சிக்கி 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.  கராச்சியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று திடீரென  இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து மூத்த காவல் அலுவலர் அல்தாப் உசேன் கூறியதாவது , “கட்டட இடிந்து விழுந்தவுடன் எங்களுக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தோம்.  இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிருக்கு போராடியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். முதலில் ஒருவரது  சடலம் மட்டும் தென்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

97 பேரின் கதி ? ”குடியிருப்பில் பாய்ந்த விமானம்” பதறவைக்கும் வீடியோ ….!!

பாகிஸ்தான் கராச்சி விமான நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. பாகிஸ்தான் நாட்டில் லாகூரில் இருந்து 97 பேருடன் வந்த ஏர்பஸ் ஏ320 ரக விமானம் கராச்சி  விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அங்குள்ள குடியிருப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தில் 85 பயணிகளும், 12 விமான பணி குழுவினரும் சேர்த்து 97 பேர் பேர் இருந்துள்ளனர். கராச்சி விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சற்று முன்னதாக விமான கட்டுப்பாட்டு […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் கராச்சி அருகே குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து… !

பாகிஸ்தான் கராச்சி விமான நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ஏர்பஸ் ஏ320 ரக விமானம் தரையிறங்கும் முயற்சியின் போது கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. லாகூரில் இருந்து கராச்சி வந்த விமானம் தரையிறங்கும் முயற்சியின் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயணிகள் 91 பேர் உள்ளிட்ட 107 பேர் வரை விமானத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து விவரங்கள் வெளியாகவில்லை. தற்போது காவல்துறை அதிகாரிகள் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

BREAKING: பாகிஸ்தானில் 90 பேருடன் சென்ற விமானம் நொறுங்கியது ….!!

பாகிஸ்தானில் ஏர்பஸ் A320 விமானம் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளதாக செய்தி வந்துள்ளது. 90 பேருடன் சென்ற விமானத்தில் விமான பணியாளர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்டோரும் சேர்த்து 100 பேர் இருப்பார்கள் என்று சொல்லப்படுகின்றது. இந்த விமானமானது இஸ்லாமாபாத் கராச்சியில் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் குறைந்த செலவில் செல்லக் கூடியதாகும். இதில் பயணித்த 100பேரின் கதி என்னவென்று அதிகாரபூர்வமாக ஏதும் தெரியாதநிலையில் தற்போது மீட்புப்பணி நடைபெற்று […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றத்திற்குள்ளான இந்து தம்பதி

பாகிஸ்தானில் இந்து தம்பதி கட்டாய மதமாற்றத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு பணம் அளிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன. பாகிஸ்தானின் நவாப்ஷா மாவட்டத்திலுள்ள சிந்து பகுதிக்கு அருகிலுள்ள பள்ளிவாசலில் பரேல்வி கொள்கைகளைப் பின்பற்றும் ஜமாஅத் அஹ்லே சுன்னத்தின் தலைவர் முன்னிலையில், இந்து தம்பதியினர் நேற்று கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். மதமாற்றம் நடைபெற்ற பின்னர் அந்தத் தம்பதியினருக்கு பணமும் அளிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில காலங்களாக பாகிஸ்தானில் மத ரீதியிலான தாக்குதல்களும், கட்டாய மதமாற்றங்களும் நடைபெற்றுவருவதாகவும், […]

Categories
உலக செய்திகள்

போதை பழக்கம்…. கண்டித்த குடும்பத்தினர்…. குடும்பத்துடன் தீ வைத்த கொடூரம்…!!

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் குடும்பத்தினரை தீ வைத்து கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏப்ரல் மாதத்தின் இறுதியில் தஸ்கா நகரின் முகமது புறா பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. மே 10 அன்று குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட 25 வயதான அலி ஹம்சா அவரது போதை பழக்கங்களை குடும்பத்தினர் கண்டித்ததால் அவர்களுடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் அவர்கள் தூங்கும் பொழுது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டதாக காவல்துறையினரிடம் அலி ஹம்சா தெரிவித்துள்ளார்.  […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்திற்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள்…. விவசாயத்திற்கு பேராபத்து!!

பாகிஸ்தானில் இருந்து படையெடுத்த வெட்டுக்கிளிகள் வடமாநிலமான ராஜஸ்தானிற்குள் நுழைந்தது. பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்துக்குள்ளும் அவை ஊடுருவியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் வெட்டுக் கிளிகள் தாக்குதலால் விவசாய பயிர்கள் பெரும் அழிவை சந்தித்து வருகின்றன. இது தொடர்பாக பேசிய வேளாண் துறை இயக்குநர் வி.கே. சர்மா கூறியதாவது, ” வெட்டு கிளிகள் அஜ்மீர் மாவட்டத்தைத் தாக்கியது. மேலும் இந்த வெட்டுக்கிளிகள் நாகூரிலிருந்து அஜ்மீர் மாவட்டத்திற்குள் நுழைத்த […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் முதல் முறையாக இந்து இளைஞனுக்கு கிடைத்த அரசு அங்கீகாரம்…. குவியும் பாராட்டுக்கள்….!!

பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கு விமானப்படையில் பைலட்டாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தர்பார்கர் தான் பெரிய மாவட்டம் இதுவே இந்து மக்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதியாக இருந்து வருகிறது. இப்பகுதியை சேர்ந்த இளைஞர் ராம் தேவ் என்பவர் பாகிஸ்தான் விமானப்படையில் தற்போது பைலட்டாக சேர்க்கப்பட்டுள்ளார். சிறுபான்மையினராக விளங்கும் இந்து மதத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் பாகிஸ்தான் விமானப்படையின் விமானியாக சேர்வது இதுவே முதல் முறை. இதுகுறித்து பாகிஸ்தானிய இந்து […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக விமானப்படையில் முதல் இந்து பைலட்!

பாகிஸ்தானின் வரலாற்றில் முதல்முறையாக, அந்நாட்டின் விமானப்படையில் ஒரு இந்து விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராகுல் தேவ் என்ற இளைஞர் பாகிஸ்தான் விமானப்படையில் பொது கடமை பைலட் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிந்து மாகாணத்தின் மிகப்பெரிய மாவட்டமான தார்பார்கரைச் சேர்ந்தவர் ராகுல் தேவ், அப்பகுதியில் இந்து சமூகத்தை சேர்ந்த  பெரும்பாலான  மக்கள் வசித்துவருகின்றனர். இது குறித்து அனைத்து பாகிஸ்தான் இந்து பஞ்சாயத்து செயலாளர் ரவி தவானி  கூறுகையில்; தேவின் நியமனம்  மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. அதுபோல சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

”கொரோனாவுக்கு பெண்கள் தான் காரணம்” மதகுரு பேச்சால் சர்ச்சை …!!

மதகுரு ஒருவர் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை பிரதமர் இம்ரான் கான் முன்னிலையில் வைத்தும் அது குறித்து பிரதமர் கேட்காததால் சர்ச்சை உருவாகியுள்ளது பாகிஸ்தானில் எத்சாஸ் டெலிதான் என்ற நிதி திரட்டும் விழா பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் நடைபெற்றது. பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட அந்த விழா கொரோனா தொற்றிலிருந்து நாட்டை காப்பதற்காக நிதி திரட்டும் நிகழ்வாக கருதப்பட்டது. இந்நிலையில் விழாவில் பிரதமர் முன்னிலையில் பேசிய மவுலானா தாரிக் ஜமீல் கொரோனா போன்ற தொற்று வியாதி நாட்டை கஷ்டப்படுத்துவதற்கு […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பரவ பெண்கள் தான் காரணம்”… சர்ச்சையை கிளப்பிய மதகுரு!

பாகிஸ்தானில் மவுலானா தாரிக் ஜமீல் எனும் மதகுரு, கொரோனா பரவ பெண்கள் தான் காரணம் என மேடையில் பேசியதற்கு அந்நாட்டு பிரதமர் எதுவுமே சொல்லாததால் சர்ச்சைக் கிளம்பியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் எத்சாஸ் டெலிதான் எனும் நிதி திரட்டும் விழா இஸ்லாமாபாத்தில் நடந்தது. இந்த விழாவானது பல முக்கிய தலைவர்களை ஒன்றிணைத்து நடத்தப்பட்டது. கொரோனா வைரஸில் இருந்து  நாட்டை காக்க மக்களிடம் நிதி திரட்டும் பெரும் நிகழ்வாக கருதப்பட்ட இந்த விழாவில் பிரதமர் முன்னிலையில் […]

Categories
உலக செய்திகள்

கொழுப்பெடுத்த பாகிஸ்தான்….! ”கொரோனா நேரத்தில் ஏவுகணை சோதனை” கடுப்பில் மக்கள் …!!

பாகிஸ்தான் கொரோனா தொற்று நெருக்கடியிலும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏவி சோதனையை மேற்கொண்டுள்ளது உலகமுழுவதும் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் பாகிஸ்தானில் வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்நாட்டில் வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நோக்கி நகர்ந்து பலியானவர்கள் எண்ணிக்கையும் 250-ஐ  கடந்துவிட்டது. இதனால் அந்நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் அரசாங்கம், ஊரடங்கு காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பை ஈடுகட்ட […]

Categories
உலக செய்திகள்

வெண்டிலேட்டர் துட்டுக்கா?… சும்மாவா?… பாகிஸ்தானுக்கு அனுப்ப தயாரான அமெரிக்கா!

பாகிஸ்தானுக்கு நாங்கள் வென்டிலேட்டர்களை அனுப்பி வைப்போம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி பல உயிர்களை எடுத்துள்ள நிலையில் அமெரிக்காவில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்புகளுடன் சேர்ந்து பொருளாதாரமும் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல நாடுகளில் நோயாளிகளின் சிகிச்சைக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கும் செயற்கை சுவாச கருவி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் செயற்கை சுவாச கருவி தேவைப்படும் நாடுகளுக்கு நாங்கள் அனுப்பி வைப்போம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

பகீர் தகவல்…!! ”கொரோனா நோயாளி” ஊடுருவ வைக்கும் பாகிஸ்தான்…. !!

தொற்றினால் பாதிக்கப்பட்ட பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் பாகிஸ்தான் அனுப்ப முயற்சிக்கிறது என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் தில் பாக் அய்யூனிய பிரதேசத்தின் குந்தர்பால் மாவட்டத்தில் இருக்கும் கொரோனா தனிமைப்படுத்துதல் மையங்களில் இன்று ஆய்வினை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து  பாதுகாப்புக்கு பணியமர்த்தப்பட்டுள்ள படையினருடன் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த தில் பாக் கூறியதாவது, “இதுவரை பயங்கரவாதிகளை ஆயுதங்களைக் கொடுத்து ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்பிவைத்த பாகிஸ்தான் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ஸ்கெட்ச் போட்டு…”1,800 பயங்கரவாதிகள்”…. பாதுகாக்கும் பாகிஸ்தான் …!!

மும்பையில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி உட்பட 1800 பேரை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் அரசு விலக்கியுள்ளது  சர்வதேச அளவிலான பயங்கரவாத செயல்பாடுகளை தடுக்கும் அமைப்புகளில் ஒன்றான எஃப்.ஏ.டி.எஃப். சமீபத்தில் பாகிஸ்தான் அரசு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை  ஆய்வு செய்துள்ளது. அந்த ஆய்வில் பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கண்காணிக்கப்பட்டு வரும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 7 ஆயிரத்திற்கும் அதிகமாக கணக்கிடப்பட்டு இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கையில் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் மேலும் ஒரு வீரர் வீரமரணம்… இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு-காஷ்மீரின் சோபூரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் மூன்று சிஆர்பிஎஃப் ஜவான்கள் உயிர் இழந்தனர். மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டம் சோபூரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் சிஆர்பிஎஃப் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவத்தினரும் பயங்கரவாதிகளுடன் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் இரு ராணுவத்தினர் வீரமரணம் அடைத்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்.. பதிலடி கொடுத்த 2 இந்திய வீரர்கள் வீரமரணம், மூவர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீரின் சோர்பூர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கு இடையே நடந்த தாக்குதலில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டம் சோபூரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் சிஆர்பிஎஃப் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவத்தினரும் பயங்கரவாதிகளுடன் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் இரு ராணுவத்தினர் வீரமரணம் அடைத்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

நாங்க மருந்து கொடுக்குறோம், நீங்க பயங்கரவாதிய கொடுக்குறீங்க – இந்திய ராணுவ தளபதி வேதனை

மருந்துகளை ஏற்றுமதி செய்யும் இந்தியாவிற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்கிறது என இந்திய ராணுவ தளபதி கூறியுள்ளார். உலக நாடுகள் பலவும் கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் காஷ்மீரில் இருக்கும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சில தினங்களாக பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இச்சூழலில் காஷ்மீரில் உள்ள நிலைமை குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய ராணுவத்தின் தளபதி எம்.எம்.நாரவனே இரண்டு தினங்கள் அங்கு சுற்றுப்பயணமாக சென்றார். இந்நிலையில் செய்தி நிறுவனத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

எங்க நாட்டுக்கு அனுப்பி வைங்க… பாகிஸ்தானுக்கு உதவிய இந்தியா..!

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இந்தியாவில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டினர் பாகிஸ்தான் திரும்ப இந்தியா உதவியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக  ஏப்ரல் 14 ஆம் தேதிவரை இந்தியா முழுவதும் அமல்படுத்தியிருந்த ஊரடங்கு உததரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ஆகிய பகுதிகளில் சிக்கியிருக்கும் 41 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் நாடு திரும்புவதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அதனை  உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா சிகிச்சை : ”மருத்துவர்கள் மீது தடியடி, கைது” பாகிஸ்தானில் கொடூரம் ..!!

கொரோனா சிகிச்சை கொடுக்கும் மருத்துவர்கள் பாதுகாப்பு உபகரணம் கேட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய உலகையே மிரட்டி வரும் வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலக நாடுகள் இதுவரை கொரோனா வைரஸில் இருந்து மீள்வதற்கான மருந்தை கண்டு பிடிக்காமல் திணறி வருகின்றனர். தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டி உள்ள நிலையில் பலியானோர் எண்ணிக்கை 73 ஆயிரத்தை […]

Categories
உலக செய்திகள்

கொரானா பாதிப்பு: பாகிஸ்தானில் லாக்டவுனுக்கு வாய்ப்பில்லை… கைவிரித்த இம்ரான் கான்.!

கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரசால் அந்நாட்டில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இதை  கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. பாகிஸ்தானிலும் வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில் அந்நாட்டில் லாக் டவுன் என்ற முழுமுடக்கம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவருகிறது. இந்நிலையில் நாட்டுமக்களுக்கு நேற்று உரையாற்றிய […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து அட்டூழியம்… பசியால் வாடும் குழந்தைகள்… வெட்டுக்கிளிகளால் வேதனையடையும் விவசாயிகள்..!

பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்து வருவதால் தங்களது குழந்தைகள் பசியால் வாடும் சூழல் நிலவியுள்ளதாக அந்நாட்டு விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானின் பல பகுதிகளில் வெட்டுக்கிளிகள் கூட்டம் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்து வரும் நிலையில் பாகிஸ்தான் இதனை தடுப்பதற்கு சீனாவின் உதவியை நாடியுள்ளது. இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாண பகுதிகளில் விளைநிலங்களுக்குள் புகுந்த வெட்டுக்கிளிகள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோதுமை பயிர்களை தின்று அழித்து நாசம் செய்து விட்டதாக அப்பகுதி விவசாயிகள் […]

Categories
உலக செய்திகள்

வேகமாக தாக்கும் கொரோனா… பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு!

பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்  நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 200 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 82,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் இந்த வைரசை கட்டுப்படுத்த பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

கணக்கை தொடங்கிய கொரோனா… பாகிஸ்தானில் முதல் காவு!

பாகிஸ்தானில் கொரோனா வைரசால் முதல் நபர் மரணமடைந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்  நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 82,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாகிஸ்தான் நாட்டிலும் வேகமாக பரவ தொடங்கி […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் 8 இராணுவ அதிகாரிகளுக்கு கொரோனா.. மொத்தம் 28 ஆக உயர்வு!

பாகிஸ்தான் நாட்டில் 8 இராணுவ அதிகாரிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 127 நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாகிஸ்தானிலும் பரவியுள்ளது. அந்நாட்டில் ஏற்கனவே சிந்து மாகாணத்தில் 14 பேர், கில்ட் -பல்டிஸ்தான் பகுதியில் 5 பேர் மற்றும் பலுசிஸ்தானில் ஒருவர் உட்பட 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: பாக். போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது- ஒருவர் பலி ..!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அருகே F-16 ரக போர் விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உயிரிழந்தார்.  பயிற்சியின் போது F-16 ரக போர் விமானம் கீழே விழுந்தது நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலே விமானி விங் கமாண்டர் நிவ்மான் அக்ரம் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு உதவுங்க… பாகிஸ்தானை கதி கலங்க செய்த வெட்டுக்கிளிகள்… இம்ரான் கான் எடுத்த முடிவு!

 பாலைவன வெட்டுக்கிளிகளை சமாளிக்க முடியாததால்  பாகிஸ்தான் அரசு சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடியிருக்கிறது பாகிஸ்தான் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான வெட்டுக்கிளி தாக்குதலை சந்தித்து வருகின்றது. இதனால் பாகிஸ்தான் அதிரடியாக தேசிய நெருக்கடி நிலையை (அவசர நிலை) அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பொதுவாக வெட்டுக்கிளிகள் குளிர் காலங்களில் மட்டுமே காணப்படும். ஆனால் இந்த முறை,  அங்கு நிலவும் குறைந்த வெப்பநிலை காரணமாக தொடர்ச்சியாக வெட்டுக்கிளிகள் அங்கேயே டேரா போட்டு தங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் என்னசெய்வதென்று […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெளுத்து வாங்கும் கனமழை… 17 பேர் மரணம்…. 30க்கும் மேற்பட்டோர் காயம்!

பாகிஸ்தான் நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக  ஏற்பட்ட விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே கனமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. அந்நாட்டின் கைபர் பக்துவா மற்றும் சிந்து உள்ளிட்ட மாகாணங்களில் பெய்துவரும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருக்கும் வீடுகள் இடிந்தும், சாலைகளில் மழை நீர் சூழ்ந்தும் காணப்படுகின்றது. இந்நிலையில், அந்நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழையின் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானை நிலை குலைய செய்த வெட்டுக்கிகள்… இம்ரான் கான் எடுத்த அதிரடி முடிவு!

பாகிஸ்தான் நாட்டில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் காரணமாக தேசிய அளவிலான அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது  இந்திய மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இருந்து புறப்பட்டு சென்ற வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் உணவுப் பொருட்களை தின்று அழித்து விட்டன.மேலும் அந்த வெட்டுக்கிளிகள் வயல்வெளிகளையும் தின்று அழித்ததால் கால்நடைகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் வெட்டுக்கிளிகள் எண்ணிக்கை அதிகமானது. காரணம், குறிப்பிட்ட பகுதிகளில் மழை பெய்து காலநிலை மாற்றம் ஏற்பட்டதால் வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் பன்மடங்காகப் பெருகிவிட்டது.இதனால் என்ன செய்வதென்று திக்குக்குமுக்காடி போய் விட்டனர் […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தான் நிலைகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்… தகுந்த பதிலடி..வைரலாகும் வீடியோ..!!

இந்தியா தன்னுடைய ஏவுகணை தாக்குதலை, பாகிஸ்தான் பகுதிகள் மீது நடத்தும் வீடியோ வெளியாகின. பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள், பாகிஸ்தான் ஊடுருவ செய்கிறது. இதன் அடிப்படையில் பாகிஸ்தான் இந்தியா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்று எண்ணிய நம் நாடு, ஜம்மு-காமீர் மாநிலம் குப்வாரா செக்டாருக்கு எதிரே இருக்கும்  பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது ஏவுகணைகள் மற்றும் சிறிய ரக பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தார்கள். இந்த […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் 5 மாடி கட்டடம் இடிந்து விபத்து… 15 பேர் பரிதாப பலி… 32 பேர் படுகாயம்!

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி (Karachi) நகரில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் 5 மாடி கட்டிடம் ஓன்று நேற்று திடீரென இடிந்து விழுந்து தரைமட்டனானது. இந்த விபத்தில் 15 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் 10 பேர் பெண்கள், 3 பேர் குழந்தைகள் மாற்று 2 ஆண்கள் ஆவர். மேலும் 32 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் கோர விபத்து… ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்… பேருந்தை அடித்து நொறுக்கிய ரயில்… 30 பேர் பரிதாப பலி!

பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதிய கோர விபத்தில் 30 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாநிலம் கராச்சியில் இருந்து பஞ்சாப் நோக்கி பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான பயணிகளுடன் சென்ற அந்த இரயில் ரோஹ்ரி நகர் அருகே காந்த்ரா என்ற இடத்தில் வந்தபோது, அதேசமயம் ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்கை ஒரு பேருந்து கடந்து செல்ல முயன்றது. அப்போது அந்த ரயில் பேருந்தின் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு 1 லட்சம் வாத்துக்களை அனுப்பியுள்ள சீனா ….!!

பாகிஸ்தானில் இருக்கும் வெட்டுக்‍கிளி தாக்‍குதலை சமாளிக்‍க சீனாவில் இருந்து 1 லட்சம் வாத்துக்‍கள் அனுப்பப்படுள்ளது. பாகிஸ்தானின் தெற்கு மாகாணம் சிந்துவில் இருந்து  வடகிழக்கு மாகாணம் கைபர் பக்துவா வரை இருக்கும் விவசாயிகள் கோதுமை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு அதிகளவில் விவசாயம் செய்கின்றனர். இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களின் பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகின்றன என்றும் , கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான வெட்டுக்‍கிளிகள் பாதிப்பால் லட்சக்கணக்கான ஹெக்டெர் விவசாய நிலம் கடும் […]

Categories

Tech |