பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எல்லை தாண்டி வந்து உதவுவதாக ஆப்கானிஸ்தான் உளவுத்துறை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஆப்கானிஸ்தானின் முதல் துணை அதிபர் அம்ருல்லா சலே தலீபான் பயங்கரவாதிகள் அந்நாட்டின் அரசுக்கு எதிராக ஈடுபட்டு வரும் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உதவுவதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் உளவுத்துறை அந்நாட்டை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு மற்றும் ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்குள் புகுந்து தலீபான்களுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளது. மேலும் […]
