இந்தியாவுடன் அமைதியான உறவே விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கைவிட்டால் மட்டுமே அந்நாடுடன் சுமூக உறவை மேம்படுத்த முடியும் என்று இந்தியா திட்டவட்டமாக கூறி வருகின்றது. இந்நிலையில், இந்தியாவுடன் நல்லுறவை பேண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர்களுடன் நடந்த […]
