ஆப்கானிஸ்தான் நாட்டின் களநிலவரம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் தலீபான்களால் கடத்தப்பட்டு பின் விடுவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவிலுள்ள வியான் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிக்கையாளர் அனஸ் மல்லிக் என்பவர் ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அவர் தலீபான்களால் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியது. தற்போது ஆப்கானிஸ்தான் காபுலில் மல்லிக் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை பாகிஸ்தான் தூதர் உறுதிப்படுத்தியுள்ளார். அல்கொய்தா அமைப்பினுடைய முக்கிய தலைவர் கொல்லப்பட்டது […]
