ரஷ்யா மீதான ஐ.நா.சபை வாக்கெடுப்பின் போது காஷ்மீர் குறித்து பாகிஸ்தானின் “அர்த்தமற்ற” கருத்துகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து வருகின்றது. உக்ரைன் நாட்டில் உள்ள 4 பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்ததை கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ரஷ்யாவை கண்டிக்கும் இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. இந்நிலையில், இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்துள்ளன. மேலும் இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன. […]
