சர்வதேச எல்லையை ஒட்டி உள்ள ரகுசாக் என்ற கிராமத்தில் வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள முள்கம்பி வேலியில் பலூன் ஒன்று சிக்கி இருந்தது. மேலும் அதனுடன் சிறிய காகித பாகிஸ்தான் கொடி ஒன்றும் இணைத்து கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதாவது அந்த பலூன் பாகிஸ்தான் பகுதியிலிருந்து வீசப்பட்ட நிலையில் முள்கம்பி வேலியில் சிக்கி உடைந்திருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் தாள் ஒன்றும் அந்த பாகிஸ்தான் கொடியுடன் இணைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த தாளில் செல்போன் நம்பர்கள் சில குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]
