வீரமங்கை மலாலா யூசுப்சாய் திருமணம் குறித்து கூறியுள்ள கருத்துக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. கல்வி உரிமை ஆர்வலரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், பெண்கல்விக்கு ஆதரவாகவும், பயங்கரவாதிகளின் மனித உரிமை மீறலுக்கு எதிராக குரல் கொடுத்தவருமான மலாலா யூசுப்சாய் மீது தலிபான் பயங்கரவாதிகள் கடந்த 2012-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த தாக்குதலால் பலத்த காயமடைந்த மலாலாவுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து அவர் பூரண குணமடைந்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அவர் தொடர்ந்து பெண் கல்விக்காக […]
