பாகிஸ்தான் போர்க்கப்பல் இலங்கைக்கு வந்ததை தொடர்ந்து அந்நாட்டு கடற்படையுடன் சேர்ந்து கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றது. சீன உளவு கப்பலான யுவான் வாங்-5, கடந்த 11-ஆம் தேதி இலங்கையின் அம்பந்தொட்டை துறைமுகத்துக்கு வருவதாக இருந்தது. ஆனால் வருகையை தள்ளிப்போடுமாறு இலங்கை கூறியதால் அந்த கப்பல் இன்னும் வரவில்லை. அதே சமயத்தில், பாகிஸ்தான் போர்க்கப்பலான பி.என்.எஸ்.தைமுருக்கு கொழும்பு துறைமுகத்துக்கு வர இலங்கை அனுமதி அளித்ததுள்ளது. அந்த கப்பல் மலேசியா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் பயிற்சி முடித்து விட்டு, வங்காளதேசத்தின் […]
