பஞ்சாப் மாநிலத்திலுள்ள இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையை கடந்த புதன்கிழமை தாண்ட முயன்ற நபரொருவரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு கொன்றுள்ளார்கள். பஞ்சாப் மாநிலத்திலுள்ள பெரோஸ்பூர் என்னும் மாவட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லை அமைந்துள்ளது. இந்த எல்லையை முன்னெச்சரிக்கை கொடுத்தும் பாகிஸ்தானியர் ஒருவர் தாண்ட முயன்றுள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக எல்லை படை வீரர்கள் அந்த பாகிஸ்தானியரை சரமாரியாக சுட்டு வீழ்த்தியுள்ளார்கள்.
