கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உலாந்தி வனச்சரகத்தில் கோழிகமுத்தி முகாம் அமைந்துள்ளது. இங்கு பாகன்களை வைத்து வனத்துறையினர் 22 யானைகளை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் பாகன் பிரசாந்த் என்பவர் 35 வயது மதிக்கத்தக்க சுயம்பு என்ற யானையை பராமரித்து வந்துள்ளார். நேற்று காலை பிரசாந்த் யானையை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று மாலையில் முகாமிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது திடீரென மதம் பிடித்து யானை பிரசாந்தை தாக்கி பள்ளத்தில் தூக்கி வீசியதால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் […]
