ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் இன்று காலை சுமார் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் 43 பயணிகள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது […]
