ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் தொகுதியில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய மண் அணையான பவானிசாகர் அணை, புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என பல்வேறு புகழ்பெற்ற இடங்கள் அமைந்துள்ளன. 2011ம் ஆண்டு வரை சத்தியமங்கலம் பவானிசாகர் என இரு தொகுதிகள் இருந்தது. இரண்டு தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக வாக்காளர்கள் என மாறி மாறியே வெற்றி பெற்றுள்ளனர். தொகுதி சீரமைப்புக்கு பிறகு 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது ஒன்றுபட்ட பவானிசாகர் தொகுதியாக மாறியது. […]
