பவர் எலெக்ட்ரானிக்ஸ் மின்சாதங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளை உருவாக்க ரிலையன்ஸ் நிறுவனமானது திட்டமிட்டு இருக்கிறது. சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை ஆற்றலை உற்பத்திசெய்யும் மின்சாதனங்களுக்கு தேவையான பவர் எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்களை தயாரிக்க இந்த முன்னெடுப்பு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது பசுமை ஆற்றலை தயாரிப்பதற்கு தேவையான உபகரணங்களை குறைந்த விலையிலும் அதிகமான நம்பகத்தன்மையிலும் உருவாக்க பயன்படும். இதில் பசுமை ஆற்றல் என்பது சுற்றுச் சூழலை பாதிக்காமல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது என பொருள்படும். […]
