45 வகை உணவுகளை ஒரு மணி நேரத்தில் சமைத்து அசத்திய சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த 9 வயது சிறுமி லட்சுமி சாய். ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இச்சிறுமி கொரோனோ ஊரடங்கினால் ஆன்லைன் வழியாக கல்வி கற்று வந்தார். இந்நிலையில் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் தன் தாயுடன் சேர்ந்து சமையல் செய்ய உதவி வந்துள்ளார். அப்போது சமையலின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டு, உணவுகளை சிறுமியே சமைக்க தொடங்கிவிட்டாள். […]
