10 ரூபாய் பழைய பாக்கியால் ஏற்பட்ட பிரச்சினையில் சாலையோர கடை உரிமையாளரை வாடிக்கையாளர் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள டொரியா கிராமத்தை சேர்ந்தவர் அவினாஷ் குப்தா. இவர் தனது கிராமத்தில் சாலையோர சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு வந்த அதேகிராமத்தை சேர்ந்த தினேஷ் 10 ரூபாய்க்கு சாட் மசாலா என்ற உணவை சாப்பிட்டுள்ளார். மேலும், இதற்கான பணம் 10 ரூபாயை தராமல் கடன் சொல்லிவிட்டு சென்றுள்ளார். இதை […]
