உயர் நீதிமன்ற தடைக்கு முன்பாக 10.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் பிஇ, பிடெக், மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நீதிமன்ற தடை காரணமாக எம்இ, எம்டெக், எம்ஆர்க் எம்பிளான் ஆகிய முதுநிலை பொறியியல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக் கழகத்தால் திட்டமிட்டபடி கடந்த நவம்பரில் நடத்த முடியவில்லை. அது மட்டுமல்லாமல் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிவிஎஸ்சி சேர்க்கைக்கான கலந்தாய்வு உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றி எம்பிசி மாணவர்களுக்கு பழைய […]
