சிவகங்கை பழையனூர் சுந்தரமகாலிங்கம் கோவிலில் நேற்று முன்தினம் தேர் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழையனூர் கிராமத்தில் சந்தன கருப்பண சாமி, அங்காள ஈஸ்வரி உடனமர் சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஐந்து நாட்கள் கோலாகலமாக திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் மார்ச் மாதம் 11-ஆம் தேதி காப்பு கட்டுதலும், கொடியேற்றமும் தொடங்கியது. அதனை தொடர்ந்து பரிவார தெய்வங்கள் மற்றும் […]
