சிக்க மங்களூரு அருகே குரங்கு ஒன்று பழி வாங்க வேண்டும் என்பதற்காக 22 கிலோமீட்டர் பயணித்து வந்து, 8 நாட்களாக ஆட்டோ டிரைவரை துரத்தி வருகிறது. இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் சிக்க மங்களூரு பகுதிக்குட்பட்ட கோட்டீகேஹரா என்ற கிராமத்தில் ஒரு பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளிக்கு சில நாட்களுக்கு முன்பு புகுந்த குரங்கு ஒன்று மிகுந்த அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் […]
