புதுச்சேரியில் அரசு ஊழியர் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் காரைமேடு அருகே உள்ள திருநகரில் குடிநீர் தொட்டி விநியோகம் செய்யும் ஆபரேட்டராக வேலை செய்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் ஆயுத பூஜையை முன்னிட்டு மணிவண்ணன் தண்ணீர் தொட்டிக்கு பூஜை செய்வதற்காக காரைமேடு பகுதிக்கு சென்று இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக தலை, […]
