தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய மூன்று இடங்களில் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிக்காக 17 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. கொற்கை அகழாய்வு கள இயக்குநர் தங்கதுரை தலைமையில் நடைபெற்று […]
