35 ஆண்டுகள் பழமையான வீட்டை ஊழியர்கள் எந்த விரிசலும் ஏற்படாமல் ஐந்து அடி உயரத்திற்கு தூக்கி கட்டியுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருக்கும் கலைஞர் நகர் 9வது தெருவில் ராமகிருஷ்ணன்- பிரீத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 35 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். அந்த தெருவில் பலமுறை மாநகராட்சி சார்பில் சாலைகள் போடப்பட்டுள்ளது. மேலும் இவரின் வீட்டிற்கு அருகே புதியதாக வீடுகளும் கட்டப்பட்டன. இதனால் இந்த தம்பதியினரின் வீடானது தாழ்வானது. […]
