பாகிஸ்தானில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவிலின் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய செய்தியினை டவான் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் புராணகிலா என்ற பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோயில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் தற்போது புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கோவிலில் உள்ள சிலை அகற்றப்பட்டு வேறொரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து கதவுகள் மற்றும் படிக்கட்டுகளை உடைத்து எறிந்துள்ளனர். […]
