திண்டுக்கல் பழனியில் வாகன சோதனையின் போது டாஸ்மார்க் மேற்பார்வையாளரிடம் ஆவணம் இல்லாத பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் […]