தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த தொற்றுப் பரவல் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பொதுமக்கள் வெளியில் சென்றால் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், கூட்டமாக உள்ள இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. மேலும் பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் முக கவசம் அணிய வேண்டும் . பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். […]
