பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பழங்குடியின மக்கள் தாசில்தாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அடுத்து சிறைக்காடு என்ற மலைக்கிராமம் ஒன்று உள்ளது. அப்பகுதியில் பழங்குடியின மக்கள் காலம் காலமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்டுவதற்காக 72 சென்ட் நிலத்தை ஒதுக்கியது. ஆனால் தற்போது வரையிலும் அப்பகுதியில் வீடுகள் கட்டித் தரப்படவில்லை. இதற்கிடையே போடி நகராட்சியில் இருந்து குப்பை மற்றும் […]
