பாகிஸ்தானில் இரு பழங்குடியின மக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் கைபர் பக்துன்வாம் மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் ஹைடு மற்றும் பிவர் ஆகிய 2 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவ்விரு பழங்குடியின மக்களும், குர்ரம் மாவட்டத்தின் வனப்பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று கருதுகின்றனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வனப்பகுதி குறித்து அவ்வப்போது மோதல்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று, தெரீ மேகல் கிராமத்தின் வனப்பகுதியில் பிவர் […]
