வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செம்புப் பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருகே வீடு கட்டுவதற்காக முனுசாமி என்பவர் பள்ளம் தோன்றியுள்ளார். மூன்று அடிக்கு பள்ளம் தோண்டியபோது உலோகத்தால் ஆன செம்பு பாத்திரம் கிடைத்துள்ளது. ஆனால் முனுசாமியின் மனைவி சகுந்தலா யாருக்கும் தெரியாமல் வீட்டில் மறைத்து வைத்துள்ளார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக்கு இதுபற்றி தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆரணி தாசில்தார், வருவாய் ஆய்வாளர், போலீஸார் சகுந்தலாவின் வீட்டிற்குச் […]
