கும்பகோணம் அருகே பழமை வாய்ந்த 8 சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுவாமி மலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 8 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சிலைகள் திருடப்பட்ட கோவில்கள், சிலையை திருடியவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
