விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞன் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள வல்லந்தை பகுதியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தர்சன் சிங்(55) சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் பழதோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகின்றார். இவரது தோட்டத்தில் மாம்பழம், சப்போட்டா, கொய்யா என பலவகையான மரங்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தர்சன் சிங் தோட்டத்தில் ஒரு இளைஞர் அனுமதியின்றி கொய்யா பழங்களை பறித்துள்ளார். இதனை பார்த்த தர்சன்சின் […]
