விருதுநகர் மாவட்டத்தில் போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பழக்கடை உரிமையாளர் பழங்களை சாலையில் வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மாடசாமி கோவில் தெருவில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவரம்பட்டி விலக்கு பகுதியில் பழக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் பழங்களை கடையில் இறக்கி கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன் அப்பகுதியில் அனுமதியின்றி திறந்திருந்த டீக்கடைக்கு 200 ரூபாய் அபராதம் […]
