தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து வருகின்ற ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை அழைத்துவர பயன்படுத்தும் வாகனங்களில் தரத்தை போலீஸ், கல்வி மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு வரும் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளி வாகனங்களில் போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். […]
