பள்ளி வளாகத்திற்குள் ஊர்ந்து சென்ற ஆமையை வனத்துறையினர் மீட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் பிச்சம்பட்டி கிராமத்தில் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியின் வளாகத்திற்குள் நேற்று அரிய வகை ஆமை ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் வன அலுவலர்கள் பள்ளிக்கு விரைந்து வந்து ஆமையை பார்வையிட்டுள்ளனர். அப்போதுதான் அந்த ஆமை தண்ணீரில் மட்டும் வளரும் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இந்த ஆமையை வனத்துறையினர் மீட்டு […]
