தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை அடுத்து கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாணவர்களுடைய பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் அறிவித்திருந்தார். இதற்கான பணி தற்போது தொடங்கியுள்ளது. மேலும் முதற்கட்டமாக சென்னையில் நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மொத்தம் சென்னையில் […]
